டைட்டானிக் நினைவுகள்; 103 வருடங்கள் கடந்தும் நீங்காதவை!(video)

கண்ணீர் நினைவுகளை விட்டுச்சென்ற டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் 103 வருடங்கள் கடந்துள்ளன. 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம...

டைட்டானிக் நினைவுகள்; 103 வருடங்கள் கடந்தும் நீங்காதவை!
கண்ணீர் நினைவுகளை விட்டுச்சென்ற டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் 103 வருடங்கள் கடந்துள்ளன.

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இரவு 11.40 மணிக்கு முழு உலகையும் கண்ணீரில் ஆழ்த்திய பேராபத்து இடம்பெற்றது.

பிரித்தானியாவின் தெற்கு ஹெம்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது டைட்டானிக்.

அதி சொகுசு கப்பலாக பெருமிதத்துடன் அட்லாண்டிக் சமுத்திரத்தில் கம்பீரமாக பயணித்தது.

இந்த கப்பலில் இருந்த பெரும்பாலானவர்கள் வட அமெரிக்காவிற்கு செல்பவர்களாகவே இருந்தனர்.

பயணத்தை நிறைவு செய்ய 4 நாட்களே எஞ்சியிருந்த நிலையில் டைட்டானிக் கப்பலின் பயணம் அட்லாண்டிக் சமுத்திரத்தில் ஐஸ் பாறையில் மோதி ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி நின்றது.

அதிகக்குளிர் காரணமாக சமுத்திரத்தில் மூழ்கி 1511 பேர் உயிரிழந்தனர்.

706 பயணிகளால் மாத்திரமே உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.

இந்தக் கப்பலின் சிதைவுகள் 1985 ஆம் ஆண்டில் 12 ஆயிரத்து 415 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டது.

அந்த சிதைவுகள் இன்றும் உலகில் பல்வேறு காட்சியகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
(newsfirst)

Related

உலகம் 3661092873215249846

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item