ஐபிஎல் ஆரம்ப விழாவில் அனுஷ்காவின் நடனத்தை பார்த்து ரசித்த கோஹ்லி
ஐபிஎல் ஆரம்ப விழாவில் தனது காதலி அனுஷ்கா சர்மா நடனம் ஆடியதை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராத் கோஹ்லி புன்னகையுடன் ரசித்துப்...


ஐபிஎல் ஆரம்ப விழா கலை நிகழ்ச்சிகளுடன் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பாலிவுட் நடிகர்கள் ரித்திக் ரோஷன், ஷாஹித் கபூர், பர்ஹான் அக்தர், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
விழாவில் பலரின் கண்களும் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் கோஹ்லி மற்றும் அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா மீது தான் இருந்தது.
அனுஷ்கா சர்மா இந்தி பட பாடல்களுக்கு ஆடி அசத்தினார். அவர் ஆடும்போது தொலைக்காட்சி கேமராக்கள் கோஹ்லியை நோக்கி சென்றன. முதலில் நெளிந்த கோஹ்லி பின்னர் புன்னகையுடன் தனது காதலி ஆடுவதை ரசித்துப் பார்த்தார்