மன்னாரில் நிலங்களை மீண்டும் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்திலுள்ள நிலங்களை மீண்டும் மக்களிடம் வழங்குவது குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றள்ளது. இந்த பேச்சுவார...

இந்த பேச்சுவார்த்தை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மக்களது காணிகளை மீண்டும் அவர்களுக்கே வழங்குவது தொடர்பிலும், குறித்த மக்களை மீள்குடியமர்த்துதல் தொடர்பிலும், நிலங்களை அடையாளம் காண்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
இதன்படி மாவட்ட செயலகங்களுக்கு கீழுள்ள காணிகளை இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நிலங்களை மக்களிடம் கையளிக்கும் போது இயற்கை வளங்களை பாதுகாத்தல், மற்றும் பராமரித்தல் செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் ஆயிரத்து 734 பயனாளிகள் தங்களது நிலம் குறித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 902 பயனாளிகள் தமது சொந்த காணிகளை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளது.
