மெலிதான மொடல் அழகிகளுக்கு தடை விதித்துள்ளது பிரான்ஸ்
மிகவும் மெலிதான பெண்களை மொடல் அழகிகளாகப் பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது. மெலிதாக இருப்பதுதான் அழகு என்ற பொய் பிரசாரத்தை...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_54.html

மெலிதாக இருப்பதுதான் அழகு என்ற பொய் பிரசாரத்தை மொடலிங் நிறுவனங்களும், பன்னாட்டு அழகுசாதன தயாரிப்பு நிறுவனங்களும் செய்து வருகின்றன.
மெலிதான மொடல் அழகிகளைத் தங்களின் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பலர் உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.
அதிலும், கலைகளின் தாயகமான பிரான்ஸில் இது மிக அதிகம். பிரான்ஸில் மட்டும் 40 ஆயிரம் பேர் ஒழுங்காக சாப்பிடாமல் அனோரெஸியா எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
அதிலும், 10 பேரில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி உடல் நிறை குறியீட்டெண்ணுக்கு குறைவாக உடல் எடை உள்ளவர்களை மொடலாகப் பயன்படுத்துவது குற்றமாகும்.
சமீபத்தில்தான் மெலிதாக இருப்பதுதான் அழகு என்று கூறினால் ஒரு ஆண்டு சிறையும் 10 ஆயிரம் யூரோ அபராதமும் விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது.


Sri Lanka Rupee Exchange Rate