உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இல்லை; ஐ.நாவின் விசாரணையைக் கோரி கல்முனை மக்கள் ஆர்ப்பாட்டம்

உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என தெரிவித்து இரண்டாவது நாளாகவும் கல்முனை மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய நாடுக...

உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இல்லை; ஐ.நாவின் விசாரணையைக் கோரி கல்முனை மக்கள் ஆர்ப்பாட்டம்
உள்ளக விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என தெரிவித்து இரண்டாவது நாளாகவும் கல்முனை மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளினூடாக தங்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் எதிர்வரும் 9ஆம் திகதி வரை அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ளன.

அதற்கமைய, 8ஆம் 9ஆம் திகதிகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 4731971079002402085

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item