ரயில் நிலைய சுவற்றினுள் சிக்கித் தவித்த பூனை 5 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை
2010 ஆம் ஆண்டு தனது ஓய்வூதிய பணத்தை வாங்கச் செல்வதற்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த ஆப்டோ, ஒரு பூனை பச...


ஆனால் கண்ணுக்குத் தெரிந்து அங்கு ஒரு பூனையும் இல்லாததைக் கண்டு திகைத்தார்.
அப்போது சுவற்றுக்குள்ளிருந்து ஒரு பூனையின் வால் மட்டும் வெளியே தெரியும்படி அசைந்து கொண்டிருந்தது. உடனே, என்ன செய்வதென்று புரியாமல் அதற்கு சுவற்றில் இருந்த இடைவெளி வழியாக கொஞ்சம் தண்ணீர் கொடுத்தார். அதேபோல் தினமும் அந்தக் பூனைக்கு உணவளிப்பதற்காகவே ரயில் நிலையத்திற்கு வர ஆரம்பித்தார்.
இதற்கிடையில் அந்தப் பூனைக்கு செல்லமாய் ’பிசோ’ என்று பெயர் வைத்த ’ஆப்டோ’ சுவரை உடைத்து பூனையை வெளியே கொண்டு வர நினைத்தார். ஆனால் அது அரசுக்கு சொந்தமான இடம், எகிப்து சட்டம் அதை அனுமதிக்காது.
சமீபத்தில் சுவற்றுக்கு வெளியே தெரியும் பிசோவின் வளர்ந்த வாலைப் புகைப்படமெடுத்து அதை பேஸ்புக்கில் பதிவேற்றி நூதன போராட்டம் ஒன்று நடைபெற்றது.
பேஸ்புக் மூலமாக பிராணிகள் நல ஆர்வலர்கள் இதை அறிந்த பிறகுதான் பிசோவின் வாழ்க்கையில் முதன் முதலாக வெளிச்சம் வந்தது. 5 மணி நேரமாகப் போராடி பிசோவை மீட்டுள்ளனர்.
