ஜனாதிபதி தேர்தலில் நானே வெற்றி பெறுவேன்! அமெரிக்காவுக்கு நம்பிக்கை கொடுத்த மஹிந்த
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெறுவது உறுதியென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியாக நம்பியிருந்தார் என்று தகவல் வெளியாகியுள்...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_351.html

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெறுவது உறுதியென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியாக நம்பியிருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது
தேர்தல் வாக்களிப்புக்கள் முடிவடைந்த நிலையில் இரவுவேளையில் அமெரிக்க ராஜங்க செயலாளர் ஜோன் கெரி, மஹிந்தவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார்.
இதன்போது தேர்தலில் தோல்வியடைந்தால் அதிகாரத்தை அமைதியாக கையளிப்பது குறித்து கெரி வினவினார்.
இதன்போது பதில் வழங்கிய மஹிந்த ராஜபக்ச, தேர்தல் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. தாம் வெற்றியில் நம்பிக்கையாக இருக்கிறேன் எனவே வெற்றியின் பின்னர் உங்களுடன் தொடர்புகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அத்துடன் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கைக்கு வருமாறு ஜோன் கெரிக்கு விடுத்த அழைப்பையும் மஹிந்த ராஜபக்ச நினைவூட்டியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் முடிந்தவுடன் அலரி மாளிகையில் தமக்கு அருகில் இருந்தோரிடம் ஜோன் கெரி நல்லவர் என்றும் சர்வதேச சமூகத்துடன் பணியாற்றுவதற்கு அவர் உதவுவார் என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.
தோல்வி அறிவிக்கப்படும் வரை அவர் எதிர்கால திட்டங்களுடன் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருந்ததாக இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ள நிலையிலேயே இந்த செய்தியை இணையத்தளம் வெளியிட்டுள்ளது.