ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 19 திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிச...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_142.html

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 19 திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக அறிக்கையொன்றின் மூலம் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 37 வருடங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
ஆரம்பம் முதல் இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய மகா சங்கத்தினர் தலைமையில் செயற்பட்ட சகல சமயத் தலைவர்கள், சமூக அமைப்புக்கள், ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றுக்கும் நன்றிகள் எனவும் அதில் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும், அதனை நடைமுறைப்படுத்த இந்த சந்தர்ப்பத்திலேயே முடிந்துள்ளது.
இந்த வெற்றி இன்றுள்ளவர்களை விட பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு தான் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ஜனாதிபதி அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.