இஸ்ரேலுக்கே ஆப்புவைத்தார்கள்: ராணுவ ரகசியங்களை திருடிச் சென்ற ஹக்கர் யார் ?
இணையதளத்தில் ஊடுருவி இஸ்ரேல் நாட்டு ராணுவ ரகசியங்கள் திருடப்பட்டுள்ளன. இதை தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. உலக...


பாலஸ்தீனம், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளை சேர்ந்த ஹேக்கர்கள், தங்கள் நாட்டின் ராணுவ ரகசியங்களை திருடுவதாகவும், கடந்த 4 மாதங்களாக அவர்கள் இச்செயலில் ஈடுபட்டு வருவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ராணுவத்தில் நடைபெறும் ரகசிய நிகழ்வுகள் திருடப்பட்டு அவற்றை ஊடகங்களில் வெளியிடும் செயலிலும் ஹேக்கர்கள் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. இதைதடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ராணுவ கணினி பிரிவில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இணையதள ஊடுருவலால் பாதிக்கப்படும் நாடுகள் ஒருங்கிணைந்து இதற்கு தீர்வுகாண வேண்டும் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.அதிநவீன தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அமெரிக்காவிலும் இதுபோன்ற இணையதள ஊடுருவல் நடந்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகின. இதையடுத்து, அங்கு ராணுவத்துறையில் உள்ள கணினி பிரிவில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.