பெண் தலைமைத்துவ குடும்பங்களின் மேம்பாட்டுக்கான தேசிய நிலையம்! - அரசாங்கம் அறிவிப்பு
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் மேம்பாட்டுக்கான தேசிய மையமொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கணவனை இழந்த பல பெண்கள் கிளிநொச்சியில்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_243.html

வடக்கில் மாத்திரம் 50,000 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்கள், தமது பிள்ளைகளுக்கு உணவு, வாழிடம், கல்வி என்பவற்றை வழங்கமுடியாது ஏழ்மையில் வாடுகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட 35,000 ரூபாய் கடன் போதுமானதல்ல. இந்த தொகை அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த செலவழிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன.
எனவே, இவர்களுக்கு தமது வாழ்வாதாரத்துக்கான வருமானத்தை உழைக்க கூடுதல் உதவி வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத மது, போதைப்பொருட்கள், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை ஆகிய பெரும் பிரச்சினைகளுக்கு இந்த பெண்கள் முகங்கொடுத்துவருகின்றனர். எனினும். குற்றவாளிகளுக்கு எதிரான முறைப்பாடுகளை பதியவும் நடவடிக்கை எடுக்கவும் போதியளவு பெண் பொலிஸார் இல்லை. இதனால் இந்த பெண்களுக்கு நீதி மறுக்கப்படுகின்றது. அல்லது தாமதமாகின்றது.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் அடிப்படையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இவ்வாறான குடும்பங்களின் சமூக பொருளாதார மட்டங்களை உயர்த்துவதற்கு உரிய பரிந்துரைகளை முன்வைப்பதற்கு குழுவொன்றை நியமித்துள்ளார். அக்குழுவுக்கு சட்டத்தரணி அபிமன்னசிங்கத்தை இந்த குழுவின் தலைவராக பிரதமர் நியமித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி திட்டத்துக்கு பெண்கள் விவகார, கொள்கை திட்டமிடல், பொருளாதார விவகாரங்கள், சிறுவர் மற்றும் இளைஞர், கலாசார அலுவல்கள் அமைச்சு என்பன கூட்டாக இணைந்து வளங்களை வழங்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சும் தேவையான உதவிகளை வழங்கவுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது


Sri Lanka Rupee Exchange Rate