மலேசியாவில் புலிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லையாம் புதிய அரசு! - சாடுகிறது திவயின

படையினரால் தேடப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள், போதைப்பொருள் வர்த்தகர்கள் உள்ளிட்ட 40 பேர் மலேசியாவில் பதுங்கி...


படையினரால் தேடப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள், போதைப்பொருள் வர்த்தகர்கள் உள்ளிட்ட 40 பேர் மலேசியாவில் பதுங்கி வாழ்கின்றனர்.எனினும் இவர்களை கைது செய்ய மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்று சிங்கள நாளிதழான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.


முன்னர் கடமையில் இருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி 12 தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்களை அந்நாட்டு பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்து நாடு கடத்தியிருந்தார். இந்த அதிகாரியின் சேவைக்காலம் அண்மையில் நிறைவடைந்திருந்தது. மலேசிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் புலிச் செயற்பாட்டாளர்கள், போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்வதில் நாட்டம் காட்டுவதில்லை. புலிச் செயற்பாட்டாளர் ஒருவர் தனது கடவுச்சீட்டை புதுப்பிக்க வழங்கியிருந்தார் எனவும் அது குறித்து கூட உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை எனவும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 3604491928155831816

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item