புத்தாண்டுக்கு பின்னர் பிக்கொக் மாளிகையில் குடியேறும் முன்னாள் ஜனாதிபதி!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் புதுவருடத்திற்கு பின்னர் நாவல, ராஜகிரியவில் உள்ள பீக்கொக் மாளிகையில் குடியேறப் போவ...


முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு செய்த சேவைக்காக தான் தனது மாளிகையை அவருக்கு வழங்கியதாக இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவருமான லியனகே கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி இந்த மாளிகையில் குடியேறுவதற்கு முன்னர் அவரது ஜாதகத்திற்கு அமைய வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரக்காரர்கள் மற்றும் சோதிடர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைக்கு அமைய முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், மாளிகையின் பிரதான வாசல் கதவு வடக்கு நோக்கி இருந்ததுடன் அது கிழக்கு நோக்கி இருக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அந்த கதவு இருந்த இடத்தில் பாரிய ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாளிகையில் இருக்கும் நீச்சல் தடாகம் மகிந்த ராஜபக்சவுக்கு நற்பலனை தராது என ஜோதிடர் கூறியதால், தடாகம் கடல் மணல் போட்டு மூடப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் வீடு மாறுவது மகிந்த ராஜபக்சவுக்கு கெட்ட பலன்களை தரும் என ஜோதிடர் கூறியதால், புது வருடம் பிறக்கும் வரை தங்காலை கால்டன் வீட்டில் தங்கியிருக்க அவர் முடிவு செய்துள்ளார்.
அதன் பின்னர் பிக்கொக் மாளிகையில் குடியேற மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.