மாணவியை இரு வருடங்களாக வல்லுறவுக்குட்படுத்தி வந்த சிறிய தந்தை
பாடசாலை மாணவியொருவரை கடந்த 2 வருடங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்த நபரொருவரை முந்தலம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மதுரங்குளி -ஜின...


மதுரங்குளி -ஜின்னாவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பாதிக்கப்பட்ட மாணவியின் சிறிய தந்தை எனவும் இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவி 14 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
தனது மகள் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையை அவரது தாயார் அறிந்திருந்த போதிலும் சந்தேகநபரின் அச்சுறுத்தல் காரணமாக வெளியே தெரிவிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒருகட்டத்தில் நிலமையை பொறுத்துக்கொள்ள முடியாத தாய், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த மாணவி கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்து பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , பொலிஸார் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.