செல்ல மகளை வயிற்றில் கட்டிக்கொண்டு கலக்கலாக வந்த டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி, தனது மகளை வயிற்றில் கட்டி கொண்டு சொந்த ஊரான ராஞ்சிக்கு வந்திருந்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரு...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_13.html

டோனி கடந்த 2010ம் ஆண்டு யூலை 4ம் திகதி தனது நீண்ட நாள் தோழியான சாக்ஷியை மணந்தார்.
இதைத் தொடர்ந்து அவருடைய மனைவி சாகஷிக்கு கடந்த பெப்ரவரி மாதம் 6ம் திகதி அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜிவா என்று பெயரிடப்பட்டது.
உலகக்கிண்ண போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த டோனி, தனது மகளை கூட பார்க்காமல் இருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் சக வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமண விழா நிகழ்ச்சியில் டோனி, தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் டோனி, தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் ராஞ்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அப்போது தனது செல்ல மகளை கங்காரு போல வயிற்றில் பை கட்டி சுமந்து சென்றார். இதை அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


Sri Lanka Rupee Exchange Rate