கண்டியில் பரபரப்பை ஏற்படுத்திய நூதன திருட்டு! மக்களுக்கு எச்சரிக்கை
கண்டி நகரில் இன்று காலை வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் பெண்ணொருவரிடம் நூதன முறையில் பெறுமதியான நகையை இருவர் திருடி பறித்து விட்டு ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_104.html

கண்டி, திகன நகரின் வீதியில் இரண்டு லட்சம் பெறுமதியான நகையை அணிந்து நடந்து வந்து கொண்டிருந்த சுமார் 65 வயது பெண் ஒருவரை தொடர்ந்து வந்த இருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர்
அப்பெண்ணின் கையில் இருந்த பையை காட்டி, நாங்கள் இரகசிய குற்ற விசாரணை பிரிவை சேர்ந்தவர்கள், உங்கள் பையில் சட்டவிரோதமான பொருள் ஒன்றுள்ளது. அதனை நீங்கள் மறைத்து எடுத்துச் செல்கின்றீர்கள், உங்களை விசாரிக்க வேண்டும் என கூறி மடவளை - திகன வீதியில் ஆள் நடமாட்டம் குறைந்த இடத்துக்கு கூட்டி வந்துள்ளனர்.
அங்கு வந்து மறுபடியும், நீங்கள் பையில் எடுத்துச் செல்லும் பொருள் சட்டவிரோதமானது என கூறியுள்ளனர்.
அதனை அப்பெண்மணி மறுத்த போது நாங்கள் உங்களை நம்பத் தயாரில்லை, நம்ப வேண்டுமென்றால் உங்களிடம் உள்ள பெறுமதியான பொருள் ஒன்றை இந்த அரிசியில் வைத்து சத்தியம் செய்யவும் என அவர்களிடம் இருந்த அரிசி பக்கட்டை கையில் வைத்துள்ளனர்.
இதனை நம்பிய அப்பெண்மணி தனது நகையை (மாலை) கழற்றி அதில் வைத்து சத்தியம் செய்த போது அதனை எடுத்துக் கொண்டு இருவரும் ஓட்டம் பிடித்துள்ளனர்.
குறிப்பிட்ட பெண்ணின் சத்தத்துக்கு அங்கு பொதுமக்கள் வந்தபோது அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டதாக தெரிய வருகிறது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலிசார் விசாரணைகளை மேற்கொள்வதுடன் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் இது போன்ற நூதன திருட்டுக்களில் இருந்து பொதுமக்கள் மிக அவதானமாக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate