கோத்தபாய உட்பட 5 பேரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பரிந்துரை.?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் இரகசியப் பொலிசாருக்கு பரிந்துரை செய...


சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவன்கார்ட் கப்பல் சேவை தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, பணிப்பாளர் மஞ்சுளகுமார யாப்பா, முன்னாள் மேலதிக பாதுகாப்பு செயலாளர் திருமதி ஜெயரட்ன, ரட்ன லங்கா ஆயுதக் களஞ்சிய தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோரையே கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
முறையான அனுமதியற்ற ஆயுதப் களஞ்சியம், ஆயுதப் கப்பல் களஞ்சியம் பரிவர்த்தனை, ஆயுதப் குவிப்பு ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
Under the Prevention of terrorism Act and fire Arms Ordinance and Under the Fire Arms Ordinance and Explosive ordinance என்னும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழு இந்தக் குற்றச்சாட்டு கொண்வரப்பட்டுள்ளது. இந்தச் குற்றச் சாட்டுக்கு பிணையே இல்லை.
இச்செய்தி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இவற்றை அரச தரப்பு முற்று முழுதாக உறுதிப்படுத்த வில்லை.