ராஜபக்ஷ குடும்பத்தினரை தேடும் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தின் கீழ் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாட...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_86.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தின் கீழ் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் விசாரணைகளை நடத்தவுள்ளது.
மோடிகள் தொடர்பில் குறித்த நாடுகளிடம் சிறிலங்கா அரசாங்கம் உதவி கோரியுள்ளது.
பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் மோசடிகள் தொடர்பிலான தகவல்ளை திரட்ட ஒத்துழைப்பு வழங்குமாறு குறித்த நாடுகளிடம் கோரப்பட்டுள்ளது.
இந்த நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ளவே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய வங்கி, அமெரிக்க நீதித் திணைக்களம், லண்டனில் காணப்படும் பாரிய மோசடி விசாரணைப் பிரிவு ஆகியவற்றின் உதவி நாடப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவமொன்று பற்றி விசாரணை நடத்தப்படுவதனை போன்று செய்ய முடியாது. கால அவகாசம் தேவைப்படுகிறது.
ஏப்ரல் மாதம் 23ம் திகதிக்கு முன்னதாக பாரியளவில் விசாரணைகளை பூர்த்தி செய்ய முடியும்.
கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கத்தினால் செயற்பட முடியாது. சாட்சியங்கள் இன்றி வெறுமனே எவரையும் கைது செய்ய முடியாது.
பல்வேறு நபர்களிடம் சாட்சியங்களும் தகவல்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate