பிரியந்த சிறிசேன கொலையின் பின்னணி குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன கோடரித் தாக்குதலுக்குள்ளாகி இன்று காலை மரணித்துள்ள நிலையில் அவரது கொலை...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_859.html

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன கோடரித் தாக்குதலுக்குள்ளாகி இன்று காலை மரணித்துள்ள நிலையில் அவரது கொலையின் பின்னணி குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதியின் இளைய சகோதரரான இவர், பிரதேசத்தில் மணல் அகழ்வு மற்றும் அரிசி வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்ததோடு வெலி ராஜு (மணல் ராஜு) எனவும் அறியப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது கொலையின் சூத்திரதாரியான பொலிசில் சரணடைந்துள்ள டொன் நிஷான் லக்மால் சபுதந்திரி எனும் முழுப் பெயர் கொண்ட 34 வயதான நபர், பிரியந்த சிறிசேன தனது பெற்றோர்களை அவதூறாகப் பேசியதனாலேயே தாக்கியதாக தெரிவித்திருந்தார்
.

ஆயினும், இச்சம்பவத்தின் பின்னணி குறித்து பல்வேறு விதமான ஊகங்கள் வெளியிடப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தனிப்பட்ட விரோதத்தினால் இடம்பெற்ற இக்கொலை விவகாரம் அரசியல் மயப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி குடும்பத்தோடு நெருங்கிய உறவுகளைக் கொண்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருவருக்குமான முரண்பாடின் பின்னணியில் கொலையாளியின் மனைவியும் தொடர்பு படுத்தப்பட்டு ஊகங்கள் வெளியாகியிருக்கும் அதேவேளை இருவருக்குமிடையில் நீண்ட நாட்களாக முரண்பாடுகள் இருந்து வந்ததாகவும் குறித்த பெண் ஏற்கனவே வெளிநாட்டில் வாழ்வதால் இதற்கான சாத்தியக்கூறு இல்லையெனவும் உள்ளூர் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இருவரும் பல காலமாக நண்பர்களாகப் பழகி வந்வர்கள் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமையும் இருவருக்குமிடையிலான வேறு முரண்பாடுகளும் இருந்து வந்த நிலையில் சம்பவ தினம் கொலையாளியின் பெற்றோரோடு பிரியந்த சிறிசேன உரையாடியள்ளமையும் அதேவேளை தன் பெற்றோரை சிறிசேன அவதூறாக பேசியதாக கொலையாளி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.