காங்கேசன்துறையில் மகிந்தவின் மாளிகையைப் பார்த்து வாய் பிளந்து நின்ற ரணில்!
காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மஹிந்த ராஜபக்ச அமைத்த சொகுசு மாளிகையை சுற்றிச் சுற்றிப் பார்த்து, பிரதமர் ரணில் விக்கிரமசி...

காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மஹிந்த ராஜபக்ச அமைத்த சொகுசு மாளிகையை சுற்றிச் சுற்றிப் பார்த்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாயை பிளந்து நின்ற சம்பவம் நேற்று இடம்பெற்றது. வடக்கிற்கு 3 நாள் விஜயமாக வருகை தந்திருக்கும் பிரதமர் நேற்று காங்கேசன்துறை மற்றும் பலாலி பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது காங்கேசன்துறை பகுதியில் மஹிந்த அமைத்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையை, பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது மிகப்பெருமளவு நிதியில் மிக பிரமாண்டமான அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தையும், பெறுமதியான பெட்டகங்கள், மற்றும் தளபாடங்களை பார்த்து பிரதமர் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்.