அனந்தி நாளை முதல் தொடர் உண்ணாவிரதம்

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாளை வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். யாழ்...


வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாளை வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 09.00 மணிக்கு இவ்வாறு போராட்டத்தினை அவர் ஆரம்பிக்கவுள்ளார்.
வட பகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தில் சரணடைந்த காணாமல் போனவர்கள் உட்பட மீள்குடியேற்றம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில், வடபகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் அனந்தி சசிதரனுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர்.
புதிய அரசாங்கத்தினால் காணாமல் போனவர்கள் மற்றும், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போனவர்கள், மீள்குடியேற்றம் போன்றவற்றினை உடனடியாக நிறைவேற்றும் வரை இந்த உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.

Related

இலங்கை 3221759253350338263

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item