சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு: தலைமறைவான பொலிசாரை பிடிக்க தீவிரம்

புதுவையில் ஒரு கும்பல் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது. அந்த சிறுமிகளுடன் பொலிசாரும் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக புகார் கூறப்பட்டத...

புதுவையில் ஒரு கும்பல் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது. அந்த சிறுமிகளுடன் பொலிசாரும் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து 8 பொலிசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்து விட்டது. இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட போலீசாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் யுவராஜ், சப்–இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், பொலிசார் செல்வகுமார், சங்கர் ஆகியோர் சரணடைந்தனர். ஏட்டு பண்டரிநாதன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்களை புதுவை காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 5 போலீசாருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. ஐகோர்ட்டு காலக்கெடு முடிவடைந்ததால் வழக்கு விசாரணை தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் சுந்தர், ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்–இன்ஸ்பெக்டர் அனுஷா பாஷா, ஏட்டு குமாரவேல் ஆகியோர் இன்னும் பிடிபடவில்லை. அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சப்–இன்ஸ்பெக்டர் அனுஷா பாஷா சார்பில் ஐகோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தலைமறைவாக உள்ள பொலிசாரை சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் விரைவில் சரண் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related

உலகம் 1032157954112063996

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item