இலங்கையின் புதிய அரசாங்கத்தின் உதவியுடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா முனைப்ப
இலங்கையில் அரசாங்க மாற்றத்தை அடுத்து பாகிஸ்தானின் உதவியுடன் வளர்ந்துவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை இந்திய புலனாய்வு நி...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_669.html

இலங்கையில் அரசாங்க மாற்றத்தை அடுத்து பாகிஸ்தானின் உதவியுடன் வளர்ந்துவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை இந்திய புலனாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்திய செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இந்திய புலனாய்வு சேவை அதிகாரி ஒருவரின் தகவல்படி,
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகம் ஆதரவு வழங்கி வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதற்காக இலங்கையின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு உதவிய இலங்கையர் வழங்கிய தகவல்களின்படி, இலங்கையிலும் விசாரணைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு இலங்கை ஒத்துழைக்க உறுதியளித்துள்ளதாகவும் இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போதும் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate