ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போஆ மாநாட்டில் விசேட உரை நிகழ்த்தினார்
சீனாவில் நடைபெறும் ஆசியாவின் வருடாந்த போஆ மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்தியுள்ளார். ஆசியாவின் அபிவிருத்தி தொடர...


ஆசியாவின் அபிவிருத்தி தொடர்பில் அன்னியோன்ய கருத்துக்கள் பரிமாற்றத்தின் மேடையாக கருதப்படும் போஆ மாநாடு சீனாவின் ஹய்னான் பிராந்தியத்தில் நடைபெறுகின்றது.
இந்த மாநாட்டில் 15 நாடுகளின் அரச தலைவர்கள் உட்பட அரச அதிகாரிகள் 2800 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டின் தலைவர் முன்னாள் ஜப்பானிய பிரதமரான யஷூவோ புகுடா மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், பிரதான உரையை சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் நிகழ்த்தினார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுவீடன் பிரதமரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.