யாழில் அண்டப் புழுகு புழுகிய ரணில்
சிறிலங்காவில் எந்தவித இரகசிய இராணுவ முகாம்களும் இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_314.html
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்று சந்திப்பில் ரணில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட சந்திப்பு ஒன்று இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேடமாக ஆராயப்பட்டிருந்தது.
காணாமல்போன எவரேனும், இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என இதன் போது பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவ்வாறான இரகசிய முகாம்கள் எதுவும் சிறிலங்காவில் இல்லை எனக் அண்டப் புழுகை தெரிவித்துள்ளார்.
கோத்தபாயவினால் சில இரகசிய முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், 700க்கு மேற்பட்ட தமிழர்கள் அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடமாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கமைவாக யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி ஆகிய மாவட்டங்களை பொருளாதார வலயமாக முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் முடிந்ததும் அதற்கான செயற்பாடுகள் நடைபெறும் என்றும் ரணில் தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate