பிரியந்த சிறிசேனவின் இறுதிச் சடங்கில் பங்கேற்காமல் தவிர்த்த ஜனாதிபதி மைத்திரி!

தமது சகோதரரின் மரண இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ச...

தமது சகோதரரின் மரண இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த ஜனாதிபதியின் சகோதாரர் பிரியந்த சிறிசேன, கடந்த வாரம் நண்பர் ஒருவரால் தாக்கப்பட்டு மரணமானார். இதன்போது ஜனாதிபதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

குறித்த விஜயம் மார்ச் 28ம் திகதி முடிவடைந்தது. எனினும் நேற்று மாலை சகோதரரின் இறுதிக்கிரியை பொலநறுவையில் இடம்பெறும் வரையில் அவர் நாடு திரும்பவில்லை. எனினும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர உட்பட்ட ஜனாதிபதியுடன் சென்ற ஏனைய அதிகாரிகள் நாடு திரும்பிவிட்டனர்.

ஏற்கனவே 2012ம் ஆண்டு ஒக்டோபரில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மைத்திரிபால சிறிசேன, சுற்றாடலுக்கு ஊறு விளைவிக்கும் தமது சகோதரரை பிணையில் எடுக்கமுடியாதபடி கைதுசெய்யுமாறு உத்தரவிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது

Related

இலங்கை 671513179801066248

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item