சர்வதேச ஆடை வர்த்தக கண்காட்சி நாட்டின் ஏற்றுமதி கட்டமைப்புக்கு பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியது!

இலங்கையின் தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வருமானம் மிக உயர்ந்த வருமானமாக 2014 ஆம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டதோடு...


ris

இலங்கையின் தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வருமானம் மிக உயர்ந்த வருமானமாக 2014 ஆம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டதோடு இலங்கைக்கான முக்கியமான ஐரோப்பிய ஜீ.எஸ்.பி. பிளஸ் மீட்பு வசதி வாய்ப்புக்கள் சாதகமான சமிஞையை வெளிப்படுத்துகின்றது. நாம் இப்பொழுது எமது ஆடை ஏற்றுமதிக்கான 5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கி நகர தயாராக இருக்கிறோம். 2014 ஆம் ஆண்டு நமது நாட்டின் ஆடைகள் ஏற்றுமதிக்கான ஒட்டுமொத்த வருமானம் 4.9 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை கொழும்பு 10 டீ.ஆர். விஐயராம் மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கண்காட்சி மண்டபத்தில் தைத்த ஆடைகளுக்கான 6 வது தொடர் வர்த்தக கண்காட்சியினை அங்குரார்ப்பணம் செய்துவைத்து .உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச கண்காட்சிகளினை ஒழுங்கமைத்து நடத்துவதில் நிபுணத்துவம் பெற்ற செம்ஸ் ஸ்ரீpலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் இக்கண்காட்சி நேற்று (14) சனிக்கிழமை வரை நடைபெற்றது.


200 க்கும் மேற்பட்ட இலங்கை சீனா இந்தியா பங்களாதேஷ் இந்தோனேஷயா தாய்லாந்து மற்றும் மலேசியா உட்பட பல நாடுகளின் ஆடை நிறுவனங்கள் இச் சர்வதேச கண்காட்சியில் கலந்துக்கொண்டன. தைத்த ஆடை, தையல் நூல் ஆடைச்சாயங்கள், ஆடை இரசாயணங்கள் தொழில்துறை தையல் மெஷின்கள் தொழில்நுட்பம் இந்திரங்கள் ஆடைத்தொழில்த்துறை இந்திரங்கள் உபகரணங்கள் மற்றும் ஆடை சம்பந்தப்பட்ட சேவைகள் இச் சர்வதேச நிகழ்வில் காட்சியிடப்பட்டது. ஆயிரக் கணக்கில் சர்வதேச மற்றும் உள்ளுர் பார்வையாளர்கள் கொள்வனவாளர்கள் இக்கண்காட்சியில் கலந்துக்கொண்டனர். ஏகப்பட்ட வர்த்தக விசாரணைகளும் பதியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில் தெரிவித்தாவது. ஏற்றுமதி ஊக்குவிப்பானது ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நோக்கமாக உள்ளதால் ஆடை ஏற்றுமதிக்கான எமது இலக்கு வெற்றிகரமான முயற்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆடை தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்யும் முதல் 10 நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

கடந்த அரசாங்கத்தில் இழக்கப்பட்ட ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின் எடுக்கபட்ட முயற்சிகள் சாதக நிலைப்பாட்டினை காட்டுகிறது. வரிச் சலுகை இழக்கப்பட்டதனால் இலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகள் பல நெருக்கடி நிலைக்கு முகம்கொடுத்தன.

2013 ஆம் ஆண்டில்; ஐரோப்பிய ஒன்றியத்துடனான எமது வர்த்தக 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நெருக்கமாக இருந்தது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைள் நடைமுறையில் இருந்தால் இவ்வர்த்தகம் மிகவும் நன்மையாக இருந்திருக்கும். 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நிறுத்தியது. எனினும் இச்சலுகைகள் நிறுத்தப்பட்ட போதிலும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. வசதி தொடர்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் இலங்கையினுடைய ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையினை (குறிப்பாக ஆடை ஏற்றுமதிக்கு) இலவசமாக வழங்கியது.

ஆசியாவில் முக்கியத்தும் பெற்ற ஆடைதொழில்துறை நாடு என்ற வகையில் இக்கண்காட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன் நாட்டின் ஏற்றுமதி கட்டமைப்புக்கு பாரிய உந்த சக்தியை ஏற்படுத்தியது! என்றார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.

Related

இலங்கை 7142437821917241786

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item