87 வயது பாட்டியை கற்பழித்து சக்கர நாற்காலி மூலம் உலவவிட்ட 15 வயது சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை
அ மெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை ஒட்டியுள்ள ஹெமெட் பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்துக்குள் புகுந்த இரு பள்ளி மாணவர்கள் அங்கு...
http://kandyskynews.blogspot.com/2015/03/87-15-30.html
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை ஒட்டியுள்ள ஹெமெட் பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்துக்குள் புகுந்த இரு பள்ளி மாணவர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 87 வயது பாட்டியை முரட்டுத்தனமாக கற்பழித்தனர்.
அவரை அதோடு விட்டுவிடாமல், அங்கிருந்த 2 பாட்டில் பிளீச்சிங் பவுடர் கலந்த கரைசலை வாயில் ஊற்றி அவரை கொல்ல முயற்சித்து தப்பியோடி விட்டனர். அறைக்குள் இருந்த அபாய அறிவிப்பு பொத்தானை அந்தப் பாட்டி அழுத்தியதால் ஓடோடிவந்த காவலாளிகள் அவரை காப்பாற்றினர்.
இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பாட்டி நடமாட முடியாத முடக்குவாத நோய்க்குள்ளானார். தற்போது, சக்கர நாற்காலியின் துணையுடன் உலவிவரும் அந்த
பாட்டியை இந்த நிலைக்கு ஆளாக்கிய மாணவர்கள் ரூபன் ஜோஸ் மெலன்சன்(15), ரேமன்ட் மைக்கேல் மிரிண்டா(14) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது இரண்டாண்டுக்கு முன்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 18 வயது நிறைவடையும் வரை சிறார்கள் காப்பகத்திலும், 18 வயதுக்கு பின்னர் இதர கைதிகளுக்கான சராசரி சிறையிலும் இந்த 30 ஆண்டு தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் ஆஜரான அந்த பாட்டி, ‘நீங்கள் எனக்கு செய்துள்ள தீங்கு என்ன? என்பதை எனது முகத்தை ஒரு முறை பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். எனது சுதந்திரத்தை பறித்த நீங்கள் கட்டாயம் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும்’ என குற்றவாளிகளிடம் கண்ணீர் மல்கக் கூறியது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


Sri Lanka Rupee Exchange Rate