ஜப்பானின் புதிய உளவு செயற்கைக்கோள்: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
புதிய துணை உளவுச் செயற்கைக்கோளை ஜப்பான் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை மற்றும் மிட்சுபிஷி ஹெவி இன்...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_44.html
புதிய துணை உளவுச் செயற்கைக்கோளை ஜப்பான் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை மற்றும் மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் இரண்டும் இணைந்து கடந்த வியாழக்கிழமை ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள தனிகாஷிமா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, H-2A ராக்கெட் மூலம் இந்த உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சரியாக 10.21 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமை மற்றும் மிட்சுபிஷி ஹெவி இன்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே விண்வெளி சுற்றுப்பாதையில் ஜப்பான் நாட்டின் 2 ஆப்டிகல் மற்றும் 2 ரேடார் செயற்கைக்கோள்கள் உள்ள நிலையில் இன்று ஏவப்பட்டது ரேடார் செயற்கக்கோள்களுக்கு துணை செயற்கைக்கோளாக செயல்படுமென அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate