சிறுபான்மை மக்களின் வாக்குகளே எமது வெற்றியை தீர்மானித்தது; ஹிருணிகா

மக்களாகிய உங்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காகவே வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்ற,மாகாண சபைகளுக்கு எங்களை அனுப்பு...




2015-02-08 10.55.25




இவ்வாறான அரசியல் வாதிகளை அடுத்து வரும் தேர்தலில் ஒரங்கட்டுவதற்கான நடவடிக்கையினை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

எமது ஜனாதிபதி மைத்திரி அவர்கள் சிறுபான்மை மக்களின் நலன்களில் மிகவும் அக்கரை கொண்ட ஒரு தலைவர்.

வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து தனது நன்றிகளை தெரிவிக்க வேணட்டும் என்ற ஆசை அவரிடத்தில்இருந்த போதும் துரதஷ்டமாக அவரால் எல்லா பிரதேசங்களுக்கும் நேரடியாக வந்து தனது நன்றியனை தெரிவித்து கொள்ள முடியாதுள்ளது. அப்படியான பிரதேசங்களுக்கு அவரின் பிரதிநிதியாக என்னை அனுப்பியுள்ளார்.

அந்த வகையில் வாக்களித்த மக்களாகிய உங்களுக்கு ஜனாதிபதி சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் தங்களின் மதத்தினை தங்கு தடையின்றி சுதந்திரமாக

பின்பற்றுவதற்கான களத்தினை இப்புதிய அரசாங்கத்தின் மூலம் நாம் உருவாக்கியுள்ளோம்.

சிறுபான்மை மக்களின் வாக்குகள் தான் எமது வெற்றிக்கு வித்திட்டன என்பதை மிகத்தெளிவாக ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களிடம் கூறியுள்ளேன்.

இவ்வாறு பொத்துவில் பிரதான வீதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் இன்று 08ம் திகதி கலந்துகொண்ட மேல் மாகண சபை உறுப்பினரும், ஜனாதிபதி மைத்திரி அவர்களின் பிரத்யோக செயலாளருமான ஹிருணிகா பிரசந்திர தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த பொத்துவில் பிரதேசத்தில் கடற்தொழில், விவசாயம் போன்ற பல்வேறு பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளை கழைவதற்கான நடவடிக்கைகளை கொழும்பிற்கு சென்றவுடன்

முன்னால் ஜனாதிபதி சந்திரிகா, இன்னால் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க போன்ற அரசியல் தலைவர்களின் கவணத்திற்கு கொண்டுவந்து 100 நாள் வேலைத்திட்டட்தில் உள்ளடக்கி உடனடி தீர்வினை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பேன். நான் கூறும் இந்த வாக்குறுதியினை ஏனைய அரசியல் தலைவர்களின் பொய் வாக்குறுதி போல் கருத வேண்டாம்.

நாம் பிரதேச வாதம், மதவாதம் பேசுபவர்கள் அல்ல. எனது தந்தை பிரேமசந்திர சிறுபான்மை மக்களின் நலன்களில்

மிகுந்த அக்கரை கொண்டவர், அவர்களின் பிரச்சினைகளை நன்கறிந்தவர் என்ற வகையில் உங்களின் பிரச்சினைகளை

நானும் நன்கறிந்தவள். எனது கூற்றினை உறுதிப்படுத்த நீங்கள் விரும்பினால் கொழும்பில் உள்ள உங்கள்

உறவினர்களிடத்தில் கேட்டுப்பாருங்கள். பொய் வாக்குறுதிகளை வழங்கிவிட்டுச் செல்வதற்கு இங்கு நான்

வருகைதரவில்லை. உங்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து தீர்பதற்கே வருகை தந்துள்ளேன்.

சுபையிர் அவர்களை எங்களது பொத்துவில் தொகுதிக்கான பிரதிநிதியாக நியமித்துள்ளோம். நீங்கள் எதிர் நோக்குகின்ற

பிரச்சினைகளை அவரிடத்தில் கூறுவதன் மூலம் எங்களூடாக அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள

முடியும் இவ்வாறு தனது உரையில் தெரிவித்தார்.

இவ் மக்கள் சந்திப்பும், நன்றி நவிழல் நிகழ்வும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாலரும்,

முன்னால் பொத்துவில் மக்கள் வங்கி கிளையின் முகாமையாளர் சுபையிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர், மீனவ சங்க தலைவர் எம்.எம் ஜூனைதீன், ஜனாதிபதி அவர்களின்

சகோதரர் டட்லி சிரிசேன மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன், ஹீருணிகா அவர்களை

பார்வை இடுவதற்கு பல நூறுஇளைஞர்களும், முதியவர்களும் கொட்டும் வெயிலென பாராது சமூகம் அளித்திருந்தனர்.

2015-02-08 10.53.33 2015-02-08 10.55.25 2015-02-08 11.09.56 - Copy 2015-02-08 11.31.01




































Related

நீதிமன்றங்கள் இருப்பது மக்களுக்காக: நீதியமைச்சர்

கடந்த காலங்களில் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை தொடர்பில் மக்களுக்கு பாரிய சிக்கல்கள் இருந்ததாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரச சட்டத்தரணியின் வவுனியா உத்தியோகபூர்வ இல்லத்தை நிர்ம...

சிறுவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக்குவோம்: ரணில்

சிறுவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக்குவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறுவர்களே நாட்டின் எதிர்காலம் என தெளிவாக இந்த புதிய அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளது. எனவே சிறுவர்களின் வா...

ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கு: ஜாதிக ஹெல உறுமயவின் தேர்தல் கோஷம்

ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரும் கோஷத்துடன் ஜாதிக ஹெல உறுமய எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் என அதன் பொதுச் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். முக்கியமாக ம...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item