எனக்கும் பதவி வேண்டும்! அடம்பிடிக்கும் பொன்சேகா

தனக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக போல...

தனக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக போலியாக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமையை அரசாங்கம் எவ்வாறு ரத்து செய்து, மீளவும் பதவியில் அமர்த்தியதோ அதேபோன்று தமது பாராளுமன்ற உறுப்புரிமையையும் வழங்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாடவுள்ளேன்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், இராணுவ பட்டங்களும் மீள வழங்கப்பட்டுள்ளது.

முதலில் தமது ஆசனத்தை வழங்குவதாக ஜயந்த கெட்டகொட தெரிவித்த போதிலும் தற்போது சற்று பின்வாங்கி வருகிறார்.

ஜயந்த கெட்டகொட தமது ஆசனத்தை வழங்க முடியும் என தேர்தல் ஆணையாளரும், சட்ட மா அதிபரும் தெரிவித்துள்ளார்.

ஜயந்த கெட்டகொட பதவியை ராஜினாமா செய்தால், தாம் அந்தப் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கெட்டகொடவிடம் தாம் பதவியை யாசிக்கவில்லை.

வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளவோ அல்லது வேறும் பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்காகவோ பதவியை மீள அளிக்குமாறு கோரவில்லை எனவும், இந்த பதவி மிகவும் குறுகிய காலத்திற்கே இருக்கும் என்பது தமக்கும் தெரியும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Related

இலங்கை 3833780647911509184

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item