வடபகுதி அரச ஊழியா்களின் மா்ம உறுப்புக்களைச் சிதைக்க வேண்டும் -ஆத்திரத்தில் கூறிய கோத்தபாய
கடந்த 8ம் திகதி தோ்தல் முடிவடைந்த பின், இரவு தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த சமயம், யாழ்ப்பாணத்திலும் வடக்கு மாகாணங்களிலும் அர...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_784.html
கடந்த 8ம் திகதி தோ்தல் முடிவடைந்த பின், இரவு தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த சமயம், யாழ்ப்பாணத்திலும் வடக்கு மாகாணங்களிலும் அரச ஊழியா்களின் வாக்குகள் ஜனாதிபதி மகிந்தவுக்கு மிகக் குறைந்த அளவே கிடைத்துவருவதாக அறிந்த கோத்தபாய வடபகுதி அரச ஊழியா்களை மிகவும் தரக்குறைவாக ஏசியதாகத் தெரியவருகின்றது.
தன்னுடன் அந் நேரத்தில் தொலைபேசியில் தொடா்பு கொண்ட, வடபகுதிக்கு தன்னால் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு என நியமிக்கப்பட்ட ஒரு கேணல் தர இராணுவத்தளபதிக்கு ”இவங்களை முள்ளிவாய்க்காலில் செய்தது போல செய்ய வேணும். மோட்டார் சைக்கிளில் இருந்து எல்லாவற்றையும் பெற்றுவிட்டு எங்களின் முகத்திற்கே Urine (யுறின்) அடிக்கிறாங்கள்” என ஆவேசப்பட்டுள்ளார். தோ்தல் முடிவுகள் எமக்கு சாதகமாக வந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையாக வடபகுதி அரச ஊழியா்களுக்கான நடவடிக்கை ஒன்றை வித்தியாசமான முறையில் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவா் குறித்த இராணுவத் தளபதிக்கு கட்டளையிட்டாராம்.
இதே வேளை கிழக்கு மாகாணத்திலும் தபால்மூல வாக்குகள் தமக்கு கிடைக்கவில்லை என்பதையிட்டும் அவா் கருனாவைத் தொடா்பு கொண்டு ஏசியதாகத் தெரியவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வடபகுதி, கிழக்கு மாகாண அரச ஊழியா்களின் நிலை கவலைக்குரியதாக மாறியிருக்கும்.


Sri Lanka Rupee Exchange Rate