மகிந்த ராஜபக்ஷ சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தை மைத்ரிக்கு கையளித்தார்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பிளவுண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி மைத்ரிபாலவை சந்தித்து கட்சித் தலைமையை அவ...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_623.html

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பிளவுண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி மைத்ரிபாலவை சந்தித்து கட்சித் தலைமையை அவரிடமே விட்டுத்தருவதாக தெரிவித்துள்ளதாக சுதந்திர கட்சி தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்கிடையிலும் நேற்றிரவு இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, தான் ஒதுங்கிக்கொள்வதாகக் கூறி கட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருப்பதாகவும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழுமையாக மைத்ரியின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பிரச்சினையும் இல்லாத நிலையில் மைத்ரியின் 100 நாள் வேலைத்திட்டம் இலகுவாக முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate