ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்தினர் இஸ்லாமியர்கள் அல்ல - இலங்கை வந்த ஈரான் பிரதிநிதி

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆன்மீகத் தலைவரும் முப்படைகளின் தளபதியமான செய்யித் அலி காமெனியின் ஆலோசகரும் ஹஜ், உம்ராவுக்கான பிரதிநிதியும் தென்க...

iran11ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆன்மீகத் தலைவரும் முப்படைகளின் தளபதியமான
செய்யித் அலி காமெனியின் ஆலோசகரும் ஹஜ், உம்ராவுக்கான பிரதிநிதியும்
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பிரதிநிதியுமான ஆயத்துல்லா செய்;யித் அலி காஸி
அஸ்கர் இலங்கைக்கு ஒருவார கால உத்தியோகபூர்மற்ற விஜயத்தினை மேற்கொண்டு
கடந்த 23ம் திகதி இலங்கை வந்தார்.

கொழும்பிலுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் அல் முஸ்தபா சர்வதேச
பல்கலைக்கழகத்தின் இலங்கை கிளையின் அழைப்பையேற்ற இவ்வியத்தினை அவர்
மேற்கொண்டிருந்தார். இங்கு தங்கியிருந்த காலத்தில் சர்வமத அறிஞர்களுடன் பல
சந்திப்புக்களை நடத்தினார். குறிப்பாக பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய
அறிஞர்களை அவர் சந்தித்தார்.

கத்மேதாலிக்க பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் அவர்களை சந்தித்த
ஆயத்துல்லாஹ் காஸி அஸ்கர் இஸ்லாமிய தேசம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரை மிகவும்
வன்மையாக கண்டித்தார். ஆவர் தொடர்ந்து கூறுகையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்தினர்
இஸ்லாமியர்கள் அல்ல எனவும் இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட விசமிகள்
எனவும் குறிப்பிட்டார். பலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களினால் மேற்கொள்ளப்படும்
மிலேச்சத்தனமான கொடுமைகளை மிகவும் வன்மையாக இரு தலைவர்களும் கண்டிப்பதாக
தெரிவித்தனர்.

ஹோமாகமையில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்திற்கு சென்று
அதன் பீடாதிபதி சங். கல்லெல்ல சுமனதிறி தேரோ மற்றம் விரிவுரையாளர்களை
சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையில் பௌத்தம் பரவிய வரலாற்றினை
கேட்டறிந்த ஆயத்துல்லாஹ் இரு மதங்களுக்குமிடையிலான மனித நேய பண்புகளைப் பற்றி
விளக்கினார். இதனை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் காலங்களில் தமது
பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
கொழும்பில் அமைந்துள்ள அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் இலங்கை
கிளையின் பேட்போர் கூடத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்
பணிப்பாளர் அஸ்ஸெய்க் ஸமீல் மற்றும் பல முக்கிய இஸ்லாமிய அறிஞர்களுடனும் மிக
நீண்டநேர சந்திப்பை நடத்தினார். இதில் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர்கள்
ஆயத்துல்லாஹ் காஸி அஸ்கரிடம் பல கேள்விகளை கேட்டு ஆக்கபூர்வமான பதில்களையும்
பெற்றுக் கொண்டார்கள். ஈரானுக்கு எதிராக இஸ்லாத்தின் எதிரிகள் எவ்வாறான
பிரயத்தனங்களை மேற்கொண்டு பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் என்பது
பற்றி மிகவும் துள்ளியமாக எடுத்துக் கூறப்பட்டது.

கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு ஈரான் இஸ்லாமிய புரட்சியின்
அபிமானிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
ஓட்டமாவடி பாதிமா பாலிகா, வாழைச்சேனை ஆயிஷா பாலிகா, கல்முனை மஹ்மூத் பாலிகா
ஆகிய பாடசாலைகளுக்கு சென்று இஸ்லாத்தில் பெண்களின் முக்கியத்துவமும் அவர்களின்
கடமைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கொழும்பு-3 கோல்பேஸ் டெரஸில் அமைந்துள்ள ஈரான் கல்வி நிறுவனத்தில் இன்று
வெள்ளிக்கழமை ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். இதன்போது அல் முஸ்தபா
சர்வதேச பல்கலைக்கழக இலங்கைக் கிளையின் கல்வி நடவடிக்கைகள்
பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் குறித்தும் விளக்கினார்.

Related

உலகம் 3855438469313588397

Post a Comment

  1. Ivene oru Muslim alla Ivan poay Isis Muslim alla enru sollran kedu kettawan

    ReplyDelete

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item