மேல் மாகாணம் – வடமத்திய மாகாணமும் மைத்ரியின் பக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பு ஜனாதிபதி மைத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதைக் காரணங்காட்டி ஏற்கனவே ஆட்சி மாற்றத்திற்கான முயற்...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_592.html
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பு ஜனாதிபதி மைத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதைக் காரணங்காட்டி ஏற்கனவே ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியெடுக்கப்பட்டு வரும் மேலும் இரு மாகாண சபைகளின் முதல்வர்கள் தாம் ஜனாதிபதி மைத்ரியை ஆதரிப்பதாக இன்று அறிவித்துள்ளனர்.
மேல் மாகாண சபை முதல்வர் நிசாந்த ரணதுங்கவும் வட மத்திய மாகாண முதல்வர் எஸ்.எம் ரஞ்சித்தும் இன்று காலை இவ்வறிவித்தலை மேற்கொண்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் வடமேல் மாகாண முதல்வர் தயாசிரி ஜயசேகரவும் இதே வழியைப் பின்பற்றியமையும் மத்திய மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் நிகழும் எனும் சூழ்நிலையில் அங்கும் இவ்வாறு அறிவிக்கப்பட்டிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலும் ஐ.ம.சு.மு ஆட்சி கை மாறும் எனும் நிலையில் சபை எதிர்வரும் 20ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் மீண்டும் கூடும்போது புதிய முதல்வர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.