அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் தோற்றுப்போன அமைச்சர் ரவுப் ஹக்கீம்
இன்று இன்னும் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹஸன் அலிக்கு ராஜாங்க அமைச்சுப்...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_473.html

இதனடிப்படையில் 8 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சுப் பதவிகளும், 2 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் அமைச்சர் ரிசாத் பதியுதீ்ன் அமைச்சர் ஹக்கீமை பின்தள்ளியுள்ளார்.
எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தது ஐந்து பேருக்காவது அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் மூன்று பேருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது அமைச்சர் ஹக்கீமின் மையாளாகாத தனத்தைக் காட்டுவதாக சொல்லப்படுகின்றது.