இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வார்னர் நீக்கம்
இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தொடரின் மூன்றாவ...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_351.html
இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலியா நாளை மறுதினம் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மெதுவாக பந்து வீசிய குற்றச்சாட்டு அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது, அவருக்கு பதிலாக ஸ்டீவன் சுமித் அணியை வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தசைப்பிடிப்பு பிரச்சினையால் அவதிப்படும் டேவிட் வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக ஷான் மார்சும், கேமரூன் ஒயிட்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட காரணமாக விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் இந்த ஆட்டத்திலும் இடம்பெறமாட்டார் .


Sri Lanka Rupee Exchange Rate