மகிந்தவின் தேர்தல் பிரச்சாரம்! மக்களுக்கு வாகனங்களிலிருந்து வீசப்பட்ட உணவுப் பொட்டலங்கள் 2015 JANUARY 02,
சமுர்த்தி நிவாரணம் தருவதாகவும் நீர் இறைக்கும் இயந்திரங்களை தருவதாகவும் கூறி, தனது பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்ட மக்களுக்கு வாகனங் களிலிர...
http://kandyskynews.blogspot.com/2015/01/2015-january-02.html
சமுர்த்தி நிவாரணம் தருவதாகவும் நீர் இறைக்கும் இயந்திரங்களை தருவதாகவும் கூறி, தனது பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்ட மக்களுக்கு வாகனங்களிலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி கேவலப்படுத்திய சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றைய தினம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது.
இதற்காக ஈ.பி.டி.பி மற்றும் அங்கஜன் தலமையிலான குழுவினால் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளில் காலை 6 மணிக்கே ஏற்றிவரப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி வரும்வரையில் அதாவது நண்பகல் 12.45 மணி வரையில் தண்ணீரோ உணவுப் பொதிகளோ வழங்கப்படவில்லை.
இந்நிலையில் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வெளியே லொறிகளில் கொண்டுவரப்பட்ட உணவுப் பொதிகளை முறையாக மக்களுக்கு வழங்காமல் வாகனங்களிலிருந்தவாறே மக்களை நோக்கி தூக்கி வீசினர்.
பசி கொடுமையினால் மக்கள் அதனை எடுக்க முண்டிக் கொண்ட நிலையில் பலர் மயக்கமுற்றும் வீழ்ந்தனர்.
சமுர்த்தி நிதி கொடுப்பதாகவும், நீர் இறைக்கும் இயந்திரம் கொடுப்பதாகவும் கூறி அழைத்து வந்துவிட்டு இவ்வளவு நேரம் வெய்யிலில் நிற்கவிட்டது போதாதென்று எம்மை இவ்வாறு கேவலப்படுத்துகிறார்கள் எனக்கூறி பல மக்கள் அந்த இடத்தை விட்டே அகன்று சென்றனர்.
ஆனாலும் தூர இடங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் செய்வதற்கு வேறு வழியில்லாமல் முண்டியடித்து எறியப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்து உண்டமையினை கண்டுகொள்ள முடிந்தது