சவுதியில் முக்காடு அணியாததால் ட்விட்டரில் 1500 பேரிடம் திட்டு வாங்கிய மிஷல் ஓபாமா
சவுதி சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தலையில் ஸ்கார்ப் அணியாதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் பாரக் ...
http://kandyskynews.blogspot.com/2015/01/1500.html

அவர்கள் நேற்று கிளம்பி சவுதி அரேபியா சென்றனர். ஆக்ரா சென்று தாஜ் மஹாலை பார்க்கும் திட்டத்தை கூட ரத்து செய்துவிட்டு அவர்கள் சவுதி கிளம்பினர்.
சவுதியில் மிஷல் ஒபாமா தலையில் ஸ்கார்ப் அணியாதது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சவுதியில் பெண்கள் தலையில் ஸ்கார்ப் அணிய வேண்டும் அல்லது புர்கா அணிந்து முகத்தை மறைக்க வேண்டும்.
இந்நிலையில் மிஷல் ஸ்கார்ப் அணியாதது பற்றி பலரும் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது குறித்து #ميشيل_أوباما_سفور (roughly, #Michelle_Obama_unveiled) என்ற ஹேஷ்டேக்கில் மட்டும் 1,500 ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன.
மிஷல் இந்தோனேசியா சென்றபோது மட்டும் ஸ்கார்ப் அணிந்தாரே. சவுதி அரேபியாவில் மட்டும் ஏன் அணியவில்லை என்று சிலர் கேட்டுள்ளனர்.
அவசரமாக சவுதி வந்ததால் மிஷலை யாரும் குறை கூறக் கூடாது என்று சிலர் அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate