மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய 05 சகாக்கள் இரகசிய பொலிசாரிடம்

ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பெறுபேறுகளை மாற்றி மோசடி செய்து நாட்டை நாசப்படுத்தி சதி செய்வதற்கு முனைந்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதம நீதிய...

ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பெறுபேறுகளை மாற்றி மோசடி செய்து நாட்டை நாசப்படுத்தி சதி செய்வதற்கு முனைந்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதம நீதியரசர் மொகான் பீரிசை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவருகின்றது.

mahinda1.jpg2_1அவசராகால சட்டத்தின் படி ஜனாதிபதியின் தேர்தல் பெறுபேறுகளை நீக்குவதற்காக மகிந்தவுடன் இணைந்த குழுவினரால் ஜனாதிபதித் தேர்தலின் போது அரசுக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை திட்டமிருந்ததாக அமைச்சர் மங்கள சமரவீர குற்ப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு ஏற்ப நடத்தப்பட்ட விசாரணைகளில் பிரதம நீதியரசர் மொகான் பீரிசை கைதுசெய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு எழுத்து மூலமாக கடந்த 14 ம் திகதி முன்வைத்த முறைப்பாட்டின் படி கோட்டாபய ,ஜீ.எல்.பீரிஸ் , உதய கம்பன்வில உட்பட பிரதமர் நீதியசரசரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அது தொடர்பாக உடனடியாக சட்டத்தை அமுல் படுத்துமாறு மங்கள கேட்டுள்ளார்.

இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையின் படி 115 ஆவது அத்தியாயத்தில் அரச விரோத குற்றச்சாட்டுக்களில் அரச திட்டங்களுக்கு எதிராக 20 வருடங்கள் தண்டனை வழங்கக் கூடிய குற்றச்சாட்டாகும்.

இது தொடர்பாக இரகசிய பொலிஸ் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதுடன் மொகான் பீரிஸ் தவிர பர்சி மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச ,ஜி.எல் பீரிஸ் ஆகியோருடன் வாய்மொழி விசாரணை மேற்கொள்வதற்கும் விஸேட இரகசிய பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related

இலங்கை 5682215408379573861

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item