சிரியா-ஈராக்கில் கைப்பற்றிய பகுதிகளை தனிநாடாக அறிவித்தனர் ISIS போராளிகள்
ஈராக் அரசை எதிர்த்துப் போராடிவரும் ISIS போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள சிரியா மற்றும் ஈராக் பகுதியை ஒன்றிணைத்து ’இஸ்லாமிய அரசு’ என்ற த...
http://kandyskynews.blogspot.com/2015/02/isis.html
ஈராக் அரசை எதிர்த்துப் போராடிவரும் ISIS போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள சிரியா மற்றும் ஈராக் பகுதியை ஒன்றிணைத்து ’இஸ்லாமிய அரசு’ என்ற தனிநாடாக அறிவித்துள்ளனர்.
ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ISIS என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ISIS என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.
ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது நோக்கம்.
இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக 15 ஆயிரம் பேர் வரை படையில் சேருவதற்கு தயாராக உள்ளனர். விரைவில் 60 ஆயிரம் பேரை சேர்த்து பெரும் படையை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் படையில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.36 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகள் பலவற்றில் சன்னி முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களும் இவர்களுக்கு பண உதவி செய்து வருகிறார்கள். இந்த படையின் தலைவராக அபுபக்கர் அல் பகாதி செயல்பட்டு வருகிறார்.