முஸ்லிம் காங்கிரசின் முடிவை பாராட்டி வாழ்த்துகிறார் றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா: ஸ்ரீலங்கா முஸ்லிம் இன்று அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்கும்,நாட்டி...

இர்ஷாத் றஹ்மத்துல்லா: ஸ்ரீலங்கா முஸ்லிம் இன்று அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்கும்,நாட்டின் நல்லாட்சிக்குமாக எடுத்திருக்கும் முடிவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் வரவேற்றுள்ளதுடன்,தமது பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தின் கூட்டத்தினையடுத்து கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்,தாம் அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளருடன் இணைந்து கொள்வதாக அறிவித்ததையடுத்து,அகில இலங்கை மக்கள் காங்கிரின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சில நிமிடங்கள் இரு கட்சிகளின் தலைவர்களும்,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முழு வீச்சுடன் எஞ்சியிருக்கும் 10 தினங்களை பயன்படுத்துவது தொடர்பிலும் மனம்விட்டு உரையாடியுள்ளனர்.

மன்னாரிலும்,வவுனியாவிலும் எதிர்வரும் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  இடம் பெறும் பொது வேட்பாளர் கலந்து கொள்ளும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதற்கான அழைப்பும் றிசாத் பதியுதீனினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு இதன் போது விடுக்கப்பட்டது.

இல்ஙகையில் கடந்த சில மாதங்களாக அரசாங்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த நாட்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்காக எடுத்த தீர்மானம் தொடர்பிலும்,தமது தீர்மானத்தை அறிவிப்பது தொடர்பிலும் முஸ்லிம் காங்கிரஸ் மதில் மேல் பூனையாக இருந்துவந்தது.

அதே இன்று இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டதன் பிற்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இந்த நாட்டில் புதியதொரு நம்பிக்கையினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

Related

இலங்கை 2451676762225952504

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item