மஹிந்தவுடன் மைத்திரி இணைந்திருந்தால் அது வெட்கம் கெட்ட செயலாகும்!- வசந்த சேனாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்தால் அது வெட்கம் கெட்ட செயலாகும் என பிரதி அமைச்சர் வசந்த சேனா...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்தால் அது வெட்கம் கெட்ட செயலாகும் என பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த மைத்திரி இணைந்து கொண்டதாக வெளியான தகவல்கள் பற்றி எனக்குத் தெரியாது. இருவரும் இணைந்து கொண்டிருந்தால் அதற்காக மஹிந்தவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

அதேபோல் இவ்வாறு வெட்கம் கெட்ட செயலை ஏன் செய்தீர்கள் என ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கேட்கின்றேன்.

நாம் ஊருக்கு செல்லும் போது மக்கள் கேட்கின்றார்கள் இருவரும் இணைந்து கொண்டார்களா என?

ஊடகங்களில் கூறுவதனைப் போன்று மஹிந்த இணைந்து கொண்டிருந்தால் அவரை குற்றம் சுமத்த முடியாது, அதற்காக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.

கடந்தவாரம் மஹிந்தவுடன் இணையப் போவதில்லை, வேட்பு மனு வழங்கப்படாது என ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

தேர்தல் காலத்தில் போதைப் பொருள் எதனோல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி மைத்திரி கூறினார். மஹிந்தவின் ஆட்சியில் நடக்கும் அட்டூழியங்களை தாங்கிக் கொள்ள முடியாது தாம் வெளியேறியதாக கூறியிருந்தார்.

மனிதர் என்ற ஒர் கொள்கை இருக்க வேண்டும்.

எனினும் யார் எங்கு சேர்ந்தாலும் பிரிந்தாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டும் என வசந்த சேனாநாயக்க பொலனறுவையில் வைத்து நேற்று தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 7054471028907238702

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item