கடந்த அரசாங்கம் விட்ட பிழைகளை நல்லாட்சி அரசாங்கமும் விடுகின்றது!– பெபரல் பணிப்பாளர்
கடந்த அரசாங்கம் விட்ட பிழைகளை நல்லாட்சி அரசாங்கமும் விடுகின்றது என பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் கடந்த மஹிந்த ரா...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_363.html
கடந்த அரசாங்கம் விட்ட பிழைகளை நல்லாட்சி அரசாங்கமும் விடுகின்றது என பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
தேர்தல் காலத்தில் கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்த அதே பிழைகளை, நல்லாட்சி மைத்திரிபால அரசாங்கமும் செய்கின்றது என பெபரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புதிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை இந்த அரசாங்கமும் செய்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மருந்துப் பொருள் அதிகாரசபை, தொழில் பயிற்சி அதிகாரசபை, இளைஞர் சேவை மன்றம், உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் நியமனங்கள் வழங்கப்படுவதுடன், நியமனங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் நாம் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளோம் என ரோஹண ஹெட்டியாரச்சி நேற்று தெரிவித்துள்ளார்.