முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்ட முயற்சி

விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை முஸ்­லிம்­களின் உணர்­வு­களைத் தூண்­டி­விட்டு நாட்டில் ஒரு அசா­தா­ரண சூழ்­நி­லையை உரு­வாக்கி சமா­தா­னத்தைச் ...

விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை
முஸ்­லிம்­களின் உணர்­வு­களைத் தூண்­டி­விட்டு நாட்டில் ஒரு அசா­தா­ரண சூழ்­நி­லையை உரு­வாக்கி சமா­தா­னத்தைச் சீர்­கு­லைக்க சில சக்­திகள் முயன்று வரு­வ­தா­கவும் இது தொடர்பில் அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கி­களும் சமூ­கத்­த­லை­வர்­களும் விழிப்­புடன் இருக்கும் படியும் சமூக நலன் பேணும் அமைப்­பான உட­னடி தீர்­வுக்­குழு (RRT) வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

RRT அமைப்பின் தலை­வரும் வக்பு சபையின் உறுப்­பி­னரும் ஹஜ் குழுவின் உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் அனைத்து பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளி­டமும் இவ்­வேண்­டு­கோளை விடுத்­துள்ளார்.

அவ­ரது வேண்­டு­கோளில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லொன்று அண்­மித்­தி­ருக்கும் வேளையில் நாட்டின் பல பகு­திகளில் முஸ்­லிம்கள் மீதும் பள்­ளி­வா­சல்கள் மீதும் உணர்­வு­களைத் தூண்டும் வகை­யி­லான சில சம்­ப­வங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்த வகையில் பொரளை பள்­ளி­வாசல் மீதான சம்­ப­வத்­தையும் ஓரிரு தினங்­க­ளுக்கு முன்பு இப்­பா­க­முவ பக்மீ கொல்­லயில் இரவு நேர தொழு­கையை மேற்­கொள்ளச் சென்று கொண்­டி­ருந்த மூன்று முஸ்லிம் இளை­ஞர்கள் வாளால் வெட்­டப்­பட்­ட­மையும் குறிப்­பி­டலாம்.

மேலும் கடந்த வியா­ழக்­கி­ழமை கண்டி மீரா­மக்காம் பள்­ளி­வா­சலும் கல்­வீச்சு தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யுள்­ளது. இவ்­வாறு தொடரும் அசா­தா­ரண சம்­ப­வங்கள் மோச­மான நிலை­யொன்­றினை உரு­வாக்க கார­ணி­க­ளாக அமை­யலாம்.

எனவே ஒவ்வோர் பிர­தே­சங்­க­ளையும் சேர்ந்த சமூ­கத்­த­லை­வர்கள் விழிப்­பாக இருக்க வேண்டும்.

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் ஒன்று கூடி தமது எல்­லைக்­குட்­பட்ட பிர­தே­சங்­களின் பாதுகாப்பையும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

Related

இலங்கை 2675683689351016679

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item