இலங்கை – பாக். கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் ரசிகர்களிடையே கைகலப்பு : பெரும் பதற்றம்

இலங்கை -– பாகிஸ்தான் கிரிக்கெட் போட்­டி­யின்­போது மைதா­னத்தில் நேற்றிரவு ரசிகர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட கைக­லப்­பினால் கொழும்பு ஆர்.பிரே­ம...

இலங்கை -– பாகிஸ்தான் கிரிக்கெட் போட்­டி­யின்­போது மைதா­னத்தில் நேற்றிரவு ரசிகர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட கைக­லப்­பினால் கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ கிரிக்கெட் மைதா­னத்தில் பெரும் பதற்றம் ஏற்­பட்­டது.


இலங்கை – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டையில் நேற்று நடை­பெற்ற ஒருநாள் போட்­டியின் நடுவில் ரசி­கர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் கைகலப்­பாக மாறி­ய­தை­ய­டுத்து அங்கு பெரும் பதற்றம் நில­வி­யது. இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­தனர். அதன் பின்னர் கைக­லப்பில் ஈடு­பட்­ட­வர்­களை மைதா­னத்தை விட்­டு­வெளி­யேற்­றி­யுள்­ளனர்.


அதன்­பி­றகு ஆர்.பிரே­ம­தாஸ மைதா­னத்தின் 'பி' பிரிவு பகு­தி­யி­லி­ருந்து மைதா­னத்­திற்குள் கற்கள் வீச­யப்­பட்­ட­தா­கவும்இ அதில் கல் ஒன்று மைதா­னத்தில் களத்­த­டுப்பில் ஈடு­பட்­டி­ருந்த வீர­ருக்கு அருகில் வந்­து­வி­ழுந்­ததால் போட்டி இடை­நி­றுத்­தப்­பட்­டது.



இந்தச் சம்­பவம் குறித்து பொலிஸ் ஊட­கப்­பேச்­சா­ள­ருடன் தொடர்­கொண்டு கேட்­ட­போது, நேற்று இரவு 8.30 மணி­ய­ளவில் இந்தச் சம்­பவம் நடந்­த­தா­கவும்இ இந்த அசா­தா­ரண நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­து­விட்­ட­தா­கவும்இ வீரர்­களின் பாது­காப்பு கருதி மைதானம் விசேட அதி­ர­டிப்­ப­டையினரின் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வரப்பட்டதா­கவும் அவர் தெரி­வித்தார்.

மேலும் இது­கு­றித்து விசா­ரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாவும்இ அந்தக் குழுவின் அறிக்கை வந்தபின்னரே மேலதிகத் தகவல்கள் தெரியவரும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.




Tags:

Related

இலங்கை 2324261836554744078

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item