இலங்கைப் பெண்ணால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

கொழும்பு - டுபாய் சர்வதேச விமானம், மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 35 வயதான உவைச...


கொழும்பு - டுபாய் சர்வதேச விமானம், மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
35 வயதான உவைசா மொஹிதீன் பிச்சை அப்துல் ரசீதூ என்ற இலங்கைப் பெண் கொழும்பில் இருந்து துபாய் வழியாக மடினாவுக்கு ப்ளை டுபாய் FZ551 என்ற விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

குறித்த பெண் திடீரென மயக்கமடைந்தமையினால் விமானத்தை தரையிறக்குமாறு நிர்ப்பந்திக்கப்படவும் மும்பையில் நேற்று 10.50 மணியளவில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

MIAL மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குறித்த பயணிக்கு அவரச மருத்து உதவி வழங்கியுள்ளனர்.

பணியில் இருந்த மருத்துவர்கள், நோயாளி வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவருக்கு அவசர மருத்துவ தேவை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

குறித்த பெண் மும்பை செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related

இலங்கை 4998942931858949129

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item