ஜே.வி.பியின் சார்பில் மாவட்ட மட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர்களின் விபரம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தலைமையிலான அணி கொழும்பு மாவட்டத்திலும் சுனில் அந்துன்நெத்தி தலைமையிலான அணி...


எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தலைமையிலான அணி கொழும்பு மாவட்டத்திலும் சுனில் அந்துன்நெத்தி தலைமையிலான அணி மாத்தறையிலும் போட்டியிட உள்ளதாக அதன் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கொழும்பில் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அணியில் கே.டி.லால்காந்த, லக்ஷ்மன் நிபுனராச்சி, சுசில் வட்டகல உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர்.

கம்பஹா மாவடத்தின் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தலைமையில், தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க, மகிந்த ஜயசிங்க ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

இதனை தவிர களுத்துறையில் நனின் த ஜயதிஸ்ஸ தலைமையிலான அணியும், மாத்தறையில் சுசில் அந்துன்நெத்தி தலைமையிலான அணியும், பதுளையில் சமந்த வித்தியாபத்திரன தலைமையிலான அணியும். அம்பாந்தோட்டையில் நிஹால் கலப்பத்தி தலைமையிலான அணியும் யாழ்ப்பாணத்தில் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான அணியும், அனுராதபுரத்தில் வசந்த சமரசிங்க தலைமையிலான அணியும் கேகாலையில் காமினி ரத்நாயக்க தலைமையிலான அணியும் அம்பாறையில் வசந்த பியதிஸ்ஸ தலைமையிலான அணியும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளது.

Related

இலங்கை 2285511311985273877

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item