புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு சகலரும் விடுத்த கோரிக்கையை நான் நிராகரிக்கமாட்டேன். நாட்டுக்காகவும் தாய் மண்ணுக்காகவும் பொதுத்தேர்தலில் ந...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_15.html
நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு சகலரும் விடுத்த கோரிக்கையை நான் நிராகரிக்கமாட்டேன். நாட்டுக்காகவும் தாய் மண்ணுக்காகவும் பொதுத்தேர்தலில் நான் போட்டியிடவேண்டும் என விடுக்கப்பட்ட விடுக்கப்பட்ட கோரிக்கையை நான் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன். அந்த அடிப்படையில் பொதுத்தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தங்காலை, மெதமுலனையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இன்று நடைபெற்ற எசல பௌர்ணமி தின தர்மதேசனைக்கு பின்னர், அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் விடுப்பும் அழைப்பை புறக்கணிக்க மாட்டேன் என்றும் அதற்கான உரிமை தனக்கு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.-TC
எந்த சந்தர்ப்பத்திலும் எப்போதும் நான் கட்சிக்கு எந்த துரோகத்தையும் செய்யவில்லை. கடந்த ஆறு மாதங்களாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக பல நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரச ஊழியர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதுடன் அவர்கள் நடு தெருவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். 100 நாட்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ள நபர்களை பழிவாங்கினர். நாட்டின் அபிவிருத்தி முற்றாக நின்று போயுள்ளது.
அரசியல் பகையையும் பழிவாங்கல்களையும் நாங்கள் குப்பையில் வீசினோம். அரசியலமைப்புக்கு வெளியில் நாம் எதனையும் செய்யவில்லை. நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. நாங்கள் குப்பையில் வீசியவற்றை இவர்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
நீங்கள் இங்கு வந்து என்னை அழைப்பது பழிவாங்க அல்ல. நாட்டை கட்டியெழுப்ப. அன்று நுகேகொடையில் ஆரம்பித்த செயற்பாடுகள் இன்று மாபெரும் சக்தியாக மாறி என் வாசலுக்கு வந்துள்ளது.
நீங்கள் விடுக்கும் கோரிக்கையை நிராகரிக்கும் உரிமை எனக்கில்லை. நாட்டுக்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் போட்டியிட வேண்டும். நிறுத்தப்படடுள்ள சகலவற்றையும் கட்டியெழுப்ப எமது அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முக்கிய பயணத்தில் என்னை கைவிடாத அனைவருக்கும் தலைவணங்குகிறேன் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

