நாட்டின் நலனுக்காக கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும்: அர்ஜூன எச்சரிக்கை
நாட்டின் நலனுக்காக கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிற...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_24.html
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், அது மக்களுக்கு செய்யும் துரோகச் செயலாகவே கருதப்பட வேண்டும்.
ஜனாதிபதி அவ்வாறு செய்தால் அது நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக் கொடுப்பதாகவே கருதப்பட வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுக்கக் கூடியவர் அல்ல.
எனினும் அவ்வாறு ஓர் தீர்மானத்தை எடுத்தால் கட்சி, நிற பேதங்களைக் களைந்து நாட்டுக்காக கடுமையான தீர்மானத்தை எடுக்க பின்நிற்கப் போவதில்லை என அமைச்சர் சிங்கள இணைய ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படக் கூடாது என்பதில் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை பின்பற்றி வரும் அர்ஜூன ரணதுங்க, அண்மைக் காலமாக மஹிந்த எதிர்ப்பு கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அவரது உடன் பிறப்பான மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மஹிந்தவை பிரதமராக்கும் முனைப்பின் முக்கிய சூத்திரதாரியாக செயற்பட்டு வருகின்றார்.

