உசைன் போல்ட்டுக்குச் சவால்விடும் வகையில் காட்லின் ஓட்டம்

உசைன் போல்ட்டுக்கு சவால்விடும் வகையில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின், இந்த ஆண்டு இதுவரைக்குமான வேகமான நேரத்தில் 100 மீட்டர்கள் தூரத்தை ...

உசைன் போல்ட்டுக்கு சவால்விடும் வகையில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின், இந்த ஆண்டு இதுவரைக்குமான வேகமான நேரத்தில் 100 மீட்டர்கள் தூரத்தை ஓடியுள்ளார்.100 மீட்டர் ஓட்டத்தை 9.74 நொடிகளில் ஓடியுள்ளார் ஜஸ்டின் காட்லின்.
தோஹாவில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில், காட்லின் 100 மீட்டர் ஓட்டத்தை 9.74 நொடிகளில் ஓடியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் உசைன் போல்ட்டைவிட வேகமாக ஓடியவர்கள் எனும் பட்டியலில் முதலிடத்தில் ஜஸ்டின் காட்லின் உள்ளார்.

அவருக்கு அடுத்த இடத்தில் ஜமைக்காவின் அசாஃபா பவலும், அமெரிக்காவின் ரயான் பெய்லியும் உள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற போட்டியில் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 நொடிகளில் ஓடி உலகச் சாதனை படைத்தார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் உசைன் போல்ட்டின் பயிற்சித் தோழரும் சக நாட்டவருமான யொஹான் பிளேக் 9.69 நொடிகளில் ஓடினார்.

இப்போது ஜஸ்டின் காட்லின் 9.74 நொடிகளில் ஓடியுள்ளது, உசைன் போல்டுக்கு விடுக்கப்பட்ட ஒரு சவால் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் தெற்காசியாவில் சுமார் பத்து ஆண்டுகள் வேகமான மனிதர் என்று அறியப்பட்டவரும், இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பியனுமான டாக்டர் ஆர் நடராஜன்.போல்டின் உடல் நலம் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பீஜிங்கில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ள சூழலில், அந்தப் போட்டியில் இந்த இருவருடையேயான போட்டி மிகவும் கடுமையாக இருக்கக் கூடும் எனவும், காட்லின் வெற்றி பெறக் கூடிய நிலையும் ஏற்படலாம் எனவும் அவர் கூறுகிறார்.

ஆனாலும் கடைசி 50 மீட்டர்களில் உசைன் போல்ட்டின் ஓட்டத் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும், அவரது உடல்நிலை குறித்த கவலைகளும் உள்ளன எனவும் டாக்டர் நடராஜன் கூறுகிறார்

Related

விளையாட்டு 147515600108172003

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item